முக்கிய அறிவிப்பு:  வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்

49
முக்கிய அறிவிப்பு:  வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி
 
23-03-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கிழக்கு தாம்பரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களுடன் தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு, சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு (இராவணன் குடில்) இடமாற்றம் செய்யப்படுகிறது.
 
எனவே வேட்பாளர் தேர்வுக்குழு மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
அதனைத் தொடர்ந்து மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
 
இப்பொதுக்கூட்டத்திற்கு மாநில / மண்டல / மாவட்ட / தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகக் கூடுமாறு அழைக்கிறோம்.
 
உழவை மீட்போம்! உலகை காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு
அடுத்த செய்திஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)