அறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

489

அறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

வருகின்ற ஏப்ரல் 18 அன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. மேலும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு 50% தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மாபெரும் புரட்சிக்கான தொடக்கத்தை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 19-03-2019 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (சேப்பாக்கம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வயம் அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு