சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாளை 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;
எண் | நாள் | நேரம் | தொகுதி | பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் |
1 | 25-03-2019 திங்கள் | மாலை 05 மணி | புதுச்சேரி | புதுச்சேரி, சுதேசி ஆலை அருகில் |
இரவு 08 மணி | கடலூர் | வடலூர், பேருந்து நிலையம் அருகில் | ||
2 | 26-03-2019 செவ்வாய் | மாலை 05 மணி | செங்கல்பட்டு | திருக்கழுகுன்றம் |
இரவு 08 மணி | திருபெரும்புதூர் | ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில் |
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084