அரக்கோணம், சோளிங்கர், வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

204

செய்திக் குறிப்பு: அரக்கோணம், சோளிங்கர், வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை| நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல்
16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில்ஈடுபட்டுவருகிறார்.

மூன்றாம் நாளான நேற்று 27-03-2019 மாலை 05 மணியளவில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் யு.ரா.பாவேந்தன், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து சோளிங்கர் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.

காணொளி

இரவு 08 மணியளவில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தீபலட்சுமி, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ந.செல்வமணி, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.கலையேந்திரி ஆகியோரை ஆதரித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் (மண்டி வீதியில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
காணொளி

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஐந்தாம் நாள் (29-03-2019)
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஆறாம் நாள் (30-03-2019)