அறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

77

அறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் தலைமையில் வருகின்ற 23-01-2019 புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றுகிறார்.

கண்டனவுரையாற்றுபர்கள் விவரம்:

அ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

கே.எம்.செரிப், தலைவர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி

ஆ.கி.சோசப் கென்னடி, தலைவர், தமிழர் தேசிய விடுதலைக் கழகம்

மு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

செ.முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாகத் திரண்டு ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி