அறிவிப்பு: பிப்.03, கோவையில் திருமுருகப் பெருவிழா – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது என்கிற முழக்கத்தை ஏந்தி தமிழர் மெய்யியல் மீட்புக் களத்தில் முன்னிற்கும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்; தமிழர் இறைவன்! நமது முப்பாட்டன் முருகனின் பெரும்புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் கோவை, சிவானந்தாகாலனியில் தமிழர்களின் பாரம்பரிய இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
பெருவிழா சிறப்புரை:
பெருந்தமிழர் கிருஷ்ணகுமார்,
தமிழர் மெய்யியல் அறிஞர் இறைநெறி இமயவன்,
அய்யாவழி தலைமைபதி பால பிரஜாபதி அடிகளார்,
இயக்குநர் இமயம் பாரதிராஜா,
செந்தமிழன் சீமான்,
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
அனைவரும் வாருங்கள்!
கூடிக்கொண்டாடுவோம் திருமுருகப் பெருவிழா!
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி