கட்சி செய்திகள்: உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில்தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்அவர்களின் தலைமையில். இன்று 23-01-2019 பிற்பகல் 03 மணியளவில்சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார்.
காணொளி:
செய்தியாளர் சந்திப்பு:
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், ஹுமாயுன், களஞ்சியம் சிவக்குமார், கோட்டைக்குமார், ஆன்றோர் அவையம் மறத்தமிழ்வேந்தன், வெற்றிக்குமரன், மன்சூர் அலிகான், புதுகை ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்தரன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சாரதிராஜா மற்றும் மாரிமுத்து , கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கண்டனவுரையாற்றியவர்கள் விவரம்:
அ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
கே.எம்.செரிப், தலைவர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
ஆ.கி.சோசப் கென்னடி, தலைவர், தமிழர் தேசிய விடுதலைக் கழகம்
மு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
செ.முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084