அறிவிப்பு: ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா – வடபழனி (சென்னை)

560
அறிவிப்பு: ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா – வடபழனி (சென்னை) | நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை 05 மணிக்கு சென்னை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சிகரம் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் பாடல் குறுந்தகடு வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
 
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி