புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.! – சீமானின் செயல்திட்டம்

113
புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.!
 
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர். மக்களின் இக்கொடுந்துயர் துடைக்க அயராது பல நாட்கள் களத்தில் நின்று நிவாரண உதவிகளை வழங்கி அரசுகள் செய்யாததை, எவ்வித அதிகாரத்திலும் இல்லாத நாம் தமிழர் கட்சி செய்து காட்டியது.
 
தற்போது நிவாரணப்பணிகளின் நீட்சியாக வருகிற திசம்பர் 9, 10 ஆகிய இரு நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ‘புயலும் புணரமைப்பும்’ என்கிற செயல்திட்டத்தை முன்வைத்து நேரடியாக களத்தில் இறங்கி பழுதுபட்டத் தோப்புகளை சீரமைப்பு செய்து, புதிதாக தென்னை மரக்கன்றுகளை வழங்கியும் நடவு செய்தும் பணியாற்ற இருக்கின்றார். இத்தோடு, பிற மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து மீட்புப் பணிசெய்யவும் இருக்கிறார்கள்.
 
‘புயலும், புனரமைப்பும்’ என்கிற இச்செயல் திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, உழவர் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சியின் பேரிடர் மீட்புக்குழு ஆகியப் படைப்பிரிவுகள் முதன்மையாகச் செய்யவிருக்கிறது. இந்தப் புனரமைப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள், நிவாரணப் பொருளைச் சேகரித்து தர விரும்புகிறவர்கள், பொருளாதார உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் தலைமையின் மூலமாகவோ, நேரடியாகவோ தொடர்புக்கு வாருங்கள்.
 
இருப்பவர்களை மீட்கவும், இயற்கையை காக்கவும் இணைந்து களமாட வாருங்கள்.
 
சோழ நிலத்தை மீட்டெடுப்போம்!
 
தொடர்புக்கு,
ஹிமாயூன் – 9894011810,
செந்தில்நாதன் – 9442248351,
குகன்குமார் – 6382630906,
கந்தசாமி தமிழன் – 9585416655
 
 
பயணம் தொடங்கும் இடம்:
நாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதி அலுவலகம்,
09-12-2018 ஞாயிறு காலை 09 மணி
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி-சைதை தொகுதி
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு