அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை

849

அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

உழவு இல்லையேல் உணவு இல்லை!
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை! – என்று உணர்த்தியவர்.

விதைத்துக்கொண்டே இரு!
முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்! – என்று கற்பித்தவர்.

செயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே! – என்று உயிர் வலித்தவர்.

இயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர்.

தன்னை நேசிக்காது தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 116
https://goo.gl/maps/FgShC6MqpEG2

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு