சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி!

105

சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி! | நாம் தமிழர் கட்சி http://bit.ly/NTKHOC0057

தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான காவிரிப்படுகை மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியினரோடு பிற மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து, மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்புப் பணிகளிலும் மிக விரைவாகச் செயல்பட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முதற்கட்டமாக நவம்பர் 20,21,22 ஆகிய நாட்களில் நேரில் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டு, உணவு, உடை, போர்வை, தார் பாய் உள்ளிட்ட உடனடி உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். இரண்டாம்கட்டமாக டிசம்பர் 09,10 ஆகிய நாட்களிலும் நேரில் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான தொடக்கமாகப் புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தியும், சுற்றுசூழல் பாசறை சார்பாக 50,000 தென்னங்கன்றுகளை வழங்கி பாதிக்கப்பட்ட உறவுகள் மீண்டுவர ஆறுதல் கூறினார்.

புயல் கடந்து 30 நாட்களுக்கும் பிறகும் தொடரும் இப்பெரும்பணிக்குத் தேவையான பொருளுதவி, நிதியுதவி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும், துயர் துடைப்புப் பணிகளில் களமாடிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாகப் புரட்சி வாழ்த்துகள். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் விரைந்து செயற்பட்டு நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்குப் பொருளுதவியும், நிதியுதவியும் வழங்கி பேருதவியாக இருந்தது போற்றத்தக்கது. நாம் தமிழர் கட்சி வங்கி கணக்கில் நேரிடையாகவோ / இணையதளம் வாயிலாகவோ நிதியுதவி அளித்த உறவுகள் அதற்கான விவரங்களை ravanankudil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உறுதிசெய்துகொள்ளவும். நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ இணையதளம் (www.naamtamilar.org) மூலமாக  அறிவிக்கப்படாத எந்தவொரு வங்கி கணக்கிற்கோ, தனிநபர்களிடமோ வழங்கவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: கு.செந்தில்குமார், தலைமை நிலையச் செயலாளர்: +91-9600709263 / ksenthil@naamtamilar.org


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! – சீமான்
அடுத்த செய்திஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு