அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு – சென்னை

598

அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு – சென்னை | நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம்

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நாளை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 10:30 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள, சுபிக்சா கூட்ட அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் பணியாற்றும் உறவுகளின் நலனுக்காக ‘தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு’ (IT Employees Wing) என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் பணியாற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் தங்கள் பெயர், உறுப்பினர் எண், தொடர்பு எண், மின்னஞ்சல், பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் இடம் உள்ளிட்ட தகவல்களை https://www.naamtamilar.org/join-it-employees-wing/ இந்த இணைப்பில் உள்ள படிவத்தில் நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு பொறுப்பாளர்கள் தங்களைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவர்.

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் 222ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை
அடுத்த செய்திநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு