அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்

1143

அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | நாம் தமிழர் கட்சி

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் முன்வைத்த இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, எதிர்வரும் 27-11-2018 (செவ்வாய்கிழமை) மாலை 04 மணியளவில், தஞ்சாவூர் புறவழிச்சாலையில் உள்ள பரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகில் நடைபெறவுள்ளது.

வீரவணக்கவுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், குருதிக்கொடை, தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல், கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைவர் பிரபாகரன் பிறந்தநாள் | அரிய புகைப்படங்கள் சிறப்பு தொகுப்பு [ Tamil Leader Prabhakaran HD Wallpapers Download]
அடுத்த செய்திகஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 20-11-2018 [புகைப்படங்கள்]