அறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு

86

அறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

வனக்காவலன்! எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-10-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் இராஜா அம்மையப்பன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசப் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் இராஜீவ்காந்தி முன்னிலையில் மேட்டூர் அருகில் மூலக்காடு கிராமத்தில் உள்ள ஐயா வீரப்பனாரின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று நம் எல்லைக்காத்த மாவீரனுக்குப் பெருமையோடும் திமிரோடும் புகழ்வணக்த்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி