அறிவிப்பு: அக்.13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

192

அறிவிப்பு: அக்.13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 62ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 13-10-2018 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கிண்டி, தியாகிகள் நினைவிடத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி