செப்.26, தியாகத்தீபம் திலீபன் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

79

கட்சி செய்திகள்: செப்.26, தியாகத்தீபம் திலீபன் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன். தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 26-09-2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தியாகத்தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு முன் ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

காணொளி:

உடன் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், களஞ்சியம் சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள்  வழக்கறிஞர் இராஜீவ்காந்தி, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சுமித்ரா, மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா, வச்ரவேல், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மதுரை  தென் மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன்,  காஞ்சி தென்மண்டல செயலாளர் சஞ்சீவிநாதன், ஆவடி நல்லதம்பி, மதுரவாயல் ஆனந்த், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சாரதிராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் திரண்டு தியாகத்தீபம் திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

வலைதளம்: http://naamtamilar.org


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084