சுற்றறிக்கை: ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா’

27

சுற்றறிக்கை: ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா’ | நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ நாளை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைக்க உள்ளனர். இம்மாபெரும் சூழலியல் புரட்சிக்கான சிறு முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பனை விதைக்கும் விழாவில் பங்கேற்று மண்ணின் வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணியில் கடமையாற்றுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பனை விதைக்கும் திருவிழாவில் பங்கேற்கும் உறவுகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் (Whatsapp, Facebook, Instagram, Twitter, Youtube, etc.) பனை விதைக்கும் நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளைப் பதிவேற்றி அனைத்துத் தரப்பு மக்களிடமும் பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை (23-09-2018) காலை 10 மணிக்கு நெடுங்குன்றம் ஊராட்சி, சதானந்தபுரம் ஏரிக்கரையில் (பெருங்களத்தூர் பேருந்து நிலையம், இடப்புறச் சாலை, அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி அருகில்) பனை விதைகளை விதைத்து, பனைத் திருவிழாவைத் தொடங்கிவைக்கிறார்.

தொடர்புக்கு:
வச்ரவேல்: 8940616969
வெண்ணிலா: 9884323380
சுனந்தா: 9910385001

‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்!’


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி