அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 18-09-2018 செவ்வாய்க்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டபத்திலுள்ள தாத்தாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்படவிருக்கிறது.
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 18-09-2018 செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி
இடம்: காந்தி மண்டபம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை
https://goo.gl/maps/z1iak2SUGZB2
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084