சுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்

789

சுற்றறிக்கை: சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம், வருகின்ற 31-08-2018, வெள்ளிக்கிழமையன்று காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை ஆத்தூர், நரசிங்கபுரம், ஐந்திணை வேளாண்பண்ணையில் நடைபெறவிருக்கிறது. பயிற்சி வகுப்புகளை ‘வானகம் செந்தில்குமரன் எடுக்கவிருக்கிறார்.

இப்பயிலரங்கில் பின்வரும் தலைப்பிலான அமர்வுகள் நடைபெறவிருக்கின்றன.

  • மரபுவழி வேளாண்மையின் அவசியமும், அடிப்படையும்
  • இடுபொருள் தயாரித்தல் பயிற்சி
  • வீட்டுத்தோட்டம், உணவுத்தோட்டம் பயிற்சி
  • உணவும், உடல்நலமும்
  • கேள்விநேரம்
  • அனுபவப் பகிர்வு

இப்பயிலரங்கில் மொத்தம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பயிலரங்கில் பங்கேற்பதற்கு நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு,

வச்ரவேல் – 89406 16969
வெங்கடேஷ் – 99764 78264
வெண்ணிலா – 98843 23380

முந்தைய செய்திமதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திமத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் – தலைமை அறிவிப்பு