அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர்

223

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக நாளை 28-08-2018 செவ்வாய்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள்’: பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – பத்திரிகையாளர் சந்திப்பு