அறிவிப்பு: தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி

74

அறிவிப்பு: தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி

நச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 29-05-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு தொடர்வண்டி நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி