சுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக

29

சுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மதவெறியர்களால் பாலியல் படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு நீதி கேட்டும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் வருகின்ற 28-04-2018 சனிக்கிழமையன்று காலை 10 மணிமுதல் 03 மணிவரை சென்னை எழும்பூரில் உள்ள ஃபயாஸ் மகாலில் நடைபெறவிருகின்றது. இதில் இயக்குநர் இமயம் ஐயா பாரதிராஜா, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், வழக்கறிஞர் வே.பாலு, சூழலியல் செயற்பாட்டாளர் பியுஸ்மனுஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கருத்துரையாற்றுகிறார்கள்.

இக்கருத்தரங்கில், தமிழகம் முழுவதுமுள்ள நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் பிற சனநாயக அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், அமைப்பு சாரா சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

இதில் பங்கேற்க வாய்ப்புள்ள நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களது வருகையை முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
முன்பதிவு செய்யும் முறைமைகள்:
1. தொகுதிவாரியாக பங்கேற்பவர்கள் விவரம் (தொகுதி, பெயர், தொடர்பு எண்) அடங்கிய பட்டியலை தொகுதிச் செயலாளர் சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு 26-04-2018 வியாழக்கிழமைக்குள் விரைந்து அனுப்பிவையுங்கள்.
முகவரி: இராவணன் குடில், எண் 8, மருத்துவமனைச் சாலை, செந்தில நகர், சின்னப்போரூர், சென்னை 600116. மின்னஞ்சல்: ravanankudil@gmail.com தொலைபேசி: +044-43804084
2. தனிநபர் பங்கேற்பாளர்கள் விவரங்களைத் தெரிவிக்க தலைமை அலுவலகத்திற்கு நேரிடையாக தொடர்புகொள்ளவும். தொலைபேசி: +044-43804084


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி