அறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை

61

அறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை | நாம் தமிழர் கட்சி

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு – புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் – இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களுக்கான ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு, சென்னை காமராசர் அரங்கத்தில் இன்று 19-04-2018, வியாழக்கிழமை, பிற்பகல் 02 மணிமுதல் இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

மாலை 06 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டு இரண்டாம் அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்.

அவ்வயம் பங்கேற்க வாய்ப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்கவும்.

இடம்: காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி