அறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்

97

சுற்றறிக்கை: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு நீதி கேட்டும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் வருகின்ற 28-04-2018 சனிக்கிழமையன்று காலை 10 மணிமுதல் 03 மணிவரை சென்னை எழும்பூரில் உள்ள ஃபயாஸ் மகாலில் (ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்) நடைபெறவிருகின்றது.

கருத்துரை வழங்குபவர்கள்:
=====================================
பெருந்தமிழர் பெ.மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
————————–
இயக்குநர் இமயம் பாரதிராஜா
தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை
————————–
திருமிகு வே.பாலு
வழக்கறிஞர்
————————–
திருமிகு பியுஸ் மனுஸ்
சூழலியல் செயற்பாட்டாளர்
————————–
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
=====================================

இக்கருத்தரங்கில், தமிழகம் முழுவதுமுள்ள நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் பிற சனநாயக அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், அமைப்பு சாரா சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-43804084
www.naamtamilar.org