அறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

46

அறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி

2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடருகின்றனர்.

இன்று (26-04-2018) வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.

அவ்வயம் சென்னை மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்
அடுத்த செய்திஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)