அவசர அறிவிப்பு: பொன்னேரி தொகுதிச் செயலாளர் சே.பாலாஜி மறைவு – இறுதி மரியாதை செலுத்த சீமான் வருகை

84

அவசர அறிவிப்பு: பொன்னேரி தொகுதிச் செயலாளர் சே.பாலாஜி மறைவு – இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

இன்று 15-03-2018 வியாழக்கிழமை அதிகாலையில் 03:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் பொன்னேரி தொகுதிச் செயலாளர் சே.பாலாஜி அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை 16-03-2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காட்டூர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதை நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மரணச் செய்தி அறிந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆருயிர் தம்பி பொன்னேரி பாலாஜி மரண செய்தி கேட்டதிலிருந்து நிம்மதியற்று தவிக்கிறேன். ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரையின்போது எனக்கு முன்னால் குரலுயர்த்தி கொடியுயர்த்தி சென்றது என் நினைவில் வந்து வாட்டுகிறது. நெஞ்சுறுதிகொண்டவன் எப்படியும் மீண்டுவந்துவிடுவான் என்றுதானிருந்தேன். இப்படி இடையிலேயே என்னைவிட்டு செல்வான் என்று கனவிலும் நினைக்கவில்லை. கட்சி எடுக்கும் முடிவிற்கு நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்து செயல்வடிவம் கொடுக்கும் களப்போராளியை இழந்தது எனக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பு.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.