பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

153

செய்தி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி

ஜார்கண்ட் மாநில பாஜக அரசு போலியான காரணங்களைக் கூறி பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்துள்ளது. இந்த தடைக்கு எதிராக SDPI கட்சியின் ஒருங்கிணைப்பில் கடந்த மார்ச் 02 அன்று காலை 10:30 மனியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் மதசார்பற்ற இடதுசாரி, சனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் பங்கேற்றார்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று மார்ச் 16, வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஐயா வைகுந்தர் நிறுவிய சுவாமித்தோப்பு தலைமைப்பதியைக் காக்க மாபெரும் உண்ணாவிரத போராட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்தி37-வது ஜெனீவா ஐநா அமர்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜீவா டானிங் பங்கேற்பு