அறிவிப்பு: ஐயா வைகுந்தர் நிறுவிய சுவாமித்தோப்பு தலைமைப்பதியைக் காக்க மாபெரும் உண்ணாவிரத போராட்டம் – சீமான் பங்கேற்பு

105

அறிவிப்பு: ஐயா வைகுந்தர் நிறுவிய சுவாமித்தோப்பு தலைமைப்பதியைக் காக்க மாபெரும் உண்ணாவிரத போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை! அனைவரும் சமம்! என்ற சமநிலையை உருவாக்கி ‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்ற தத்துவத்தை முன்னிறுத்தி ஆரிய வர்ணாசிரம முறைக்கு எதிராக அனைத்து சமுதாய மக்களும் தலைப்பாகையுடன் வந்து செல்ல ஐயா வைகுண்டரால் நிறுவப்பட்ட சுவாமித்தோப்பு தலைமைப்பதியை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வலியுறுத்தி சாதி, மதம் கடந்து உரிமையை மீட்கும் அறவழி போராட்டமாக நடைபெற இருக்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சுவாமித்தோப்பு தலைமைப்பதிக்கு செல்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் இந்த அறவழி போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 18 -03 -2018 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: சுவாமித்தோப்பு தலைமைப்பதி, கன்னியாகுமரி
நேரம்: காலை 9 மணி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅவசர அறிவிப்பு: பொன்னேரி தொகுதிச் செயலாளர் சே.பாலாஜி மறைவு – இறுதி மரியாதை செலுத்த சீமான் வருகை
அடுத்த செய்திபாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை