சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு – சென்னை மாவட்டம்

46

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு – சென்னை மாவட்டம்
பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். எனவே தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கும்படி கடந்த 30-01-2018 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியல் முன்னதாக கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் வருகின்ற 24-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – நடுவண் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், எழும்பூர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார். சந்திப்பு நடைபெறும் இடம்: ஜெயமணி பாண்டியனார் திருமண அரங்கம், இளங்கோ அடிகள் தெரு, பத்மநாப நகர், சூளைமேடு
இரண்டாம் நாள் 26-02-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான சந்திப்பு நடைபெறும்.
இடம்: வி.கே.கே மஹால், மாதவரம் நெடுஞ்சாலை, சாந்தி நகர், மூலக்கடை
மூன்றாம் நாள் 27-02-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – தென் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம், தி.நகர், சைதாபேட்டை, மைலாப்பூர் மற்றும் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சந்திப்பு நடைபெறும். இடம்: அசோகா பார்க் இன், மேற்கு வன்னியர் தெரு, விருகம்பாக்கம்
அவ்வயம் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் உறுப்பினர் அடையாள அட்டையுடன் குறித்த நாளில் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.