க.எண்: 2025020067
நாள்: 14.02.2025
அறிவிப்பு:
(நாள் மற்றும் இடம் மாற்றம்)
புனிதப் போராளி பழனி பாபா தலைமை: நாள்: இடம்: |
புனிதப்போராளி பழனி பாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 16-02-2025 அன்று மாலை 04 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறவிருந்த மாபெரும் பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக நாள் மற்றும் இடம் மாற்றப்பட்டு வருகின்ற 22-02-2025 அன்று மாலை 04 மணியளவில் பழனி நெய்க்காரப்பட்டியில் நடைபெறவிருக்கிறது.
பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனவும் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி