அறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம்! தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம்!

502

அறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம்! தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம்! – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி

பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்சிக்கானப் பாசறை ‘வீரத்தமிழர் முன்னணி’யின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் முருகப் பெருந்தகையின் புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா வருகின்ற 11-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு, முப்பாட்டனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருசெந்தூரில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மிகச்சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.

பெருவிழா நிகழ்வுகள்:

வேல்-காவடி ஊர்வலம்:

குமரி முனையில் இருந்து 11-02-2018 காலை 9.30 மணிக்கு வேல் ஊர்வலம் புறப்படும். காவடி, வேல், மாலைகள், பதாகைகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக பங்கேற்கிறார்கள். வேல் ஊர்வலத்தை விடுதலைப்பாவலர் அறிவுமதி அவர்கள் கொடியசைத்து துவங்கிவைக்க கன்னியாகுமரி மண்டல வீரத்தமிழர் முன்னணி மற்றும் இளைஞர் பாசறையினர் முன்னெடுத்து செல்வார்கள். கன்னியாகுமரியை சுற்றிலும் உள்ள நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, குளச்சல், பதமநாதபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதி உறவுகள் இந்த ஊர்வலத்தில் பங்குபெற வேண்டுகிறோம்.(தொடர்புகொள்ள: 9751854361; 9843476014; 7708260631; 8904324688; 9442248351)

பேரணி:

திருச்செந்தூரை வந்தடையும் வேல்-காவடி ஊர்வலம் பேருந்து நிலையத்திலிருந்து 11-02-2018 பிற்பகல் 3:30 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்செந்தூர் கோயிலுக்குப் பெருவிழாப் பேரணியாக பறையிசை முழங்க வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக சென்று கோயிலினுள் திருமுருக வழிபாடு நடைபெறுகிறது.

பொதுக்கூட்டம்:

திருசெந்தூர் கோவில் திடலில் 11-02-2018 மாலை 4:30 மணிக்கு வீரத்தமிழர் முன்னணியின் கொடிப்பாடல் இசைக்க கொடியேற்ற நிகழ்வோடு திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் தொடங்குகிறது. பறையிசை, கருப்புசாமி நாடகம்; மள்ளர் கம்பம், வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்கள் எழுதிய ‘தமிழ் முருகன் வரலாறு’ (History of Thamizh Murugan) நூல் வெளியீடு நடைபெறும். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நூலை வெளியிட ‘தமிழ்க்கடல்’ ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்துரைகள் இடம்பெறும்.

பெருவிழாப் பேருரையாற்றுபவர்கள்:

1. ‘இறைநெறி’ ஐயா இமயவன், தமிழர் மெய்யியல் இலக்கியச் சொற்பொழிவாளர்
2. ‘பெருந்தச்சன்’ ஐயா தென்னன் மெய்மன், கோவில் கட்டிடக்கலை ஆய்வாளர்
3. ‘தமிழ்க்கடல்’ ஐயா நெல்லை கண்ணன், மூத்த தமிழறிஞர் – சொற்பொழிவாளர்
4. செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்செந்தூரில் திரள்வோம்! தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம்!

நாம் தமிழர்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி