அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

526

அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2017 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. ஐயா கக்கன் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யவிருக்கிறார்.

அவ்வயம் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

23-12-2017 பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள்: புகழ் வணக்கம்

உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை இவற்றின் இன்னுமொரு பெயர் கக்கன்!

காவல்துறை அமைச்சராக இருந்து துளி களங்கமும் இன்றிக் கடமையாற்றிய மக்கள் சேவையின் மகத்துவம்!

தலைமுறைகள் பல தாண்டியும் வாழும் தனித்துவம்!

வளரும் தலைமுறைக்குத் தூய வழிகாட்டும் தத்துவம்!

தமிழர் அறம் சார்ந்து நின்ற வரம்!
மனிதப் புனிதம்!
நமது ஐயா பெருமகன் கக்கன் அவர்களின் நினைவுநாள் இன்று (23-12-2017)

அவர் நினைவைப் போற்றுகிற நாம் அவர் காட்டிய நல்வழி நின்று நம் தமிழ்ச் சமூகத்தின் மீட்சிக்கு அதன் எழுச்சிக்கு உயர்வுக்கு அரும்பாடாற்றுவோம் என்கிற உறுதியேற்போம்

மதிப்புமிக்க அந்தப் பெருந்தகைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

தலைமை அலுவலகம்: எண்: 8, இராவணன் குடில், மருத்துவமனை சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை 600116

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஷரிஅத் பாதுகாப்புப் பேரவை நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திபெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு