அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 05-12-2017 ஐந்தாம் நாள் பரப்புரைத் திட்டம்

30

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ஐந்தாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஐந்தாம் நாளான 05-12-2017 (செவ்வாய்க்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 08:30 மணி முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 40வது வட்டம், குறுக்கு சாலை (கிராஸ் ரோடு)
தொடங்குமிடம்: பெரியார் பூங்கா

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 40வது வட்டம், அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு
தொடங்குமிடம்: செளந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் பள்ளி அருகில்
தொடர்புக்கு: 9444125013 / 8248078484

நேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்
இடம்: 41வது வட்டம், எழில் நகர், சுண்ணாம்பு கால்வாய் அருகில்
தொடர்புக்கு: 8608741914 / 9962629199

தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084