வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

124

செய்தி: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி

நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறைபட்டு செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 81ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2017 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, துறைமுகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

புகழ்வணக்கம்

“வல்லாளன் சிதம்பரனார்
சிறையிற்பட்ட வருத்தமெலாம்
விரித்துரைக்கில் வாய்விட்டே
கல்லான மனத்தவரும்
கண்ணீர் சொட்டக் கனல்பட்ட
வெண்ணெயெனக் கரைவார் இன்றும்”
– நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

ஒழுக்கத்தின் உறவோய்!
நாட்டின் உரிமை போர் நடந்த காலை
எழுச்சியின் தலைமையேற்றே
இணையிலா தியாகம் செய்தோய்!
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும்
முற்றிலும் ஒன்றி நிற்க
விழிப்பொறி இரண்டும் போல
விருப்பமாய்க் கொண்டாய் ஐயா!
பாரதிபெற்ற நந்த பழியிலா வீரவாழ்க்கை
பாரெலாம் ஏத்தும் வண்ணம்
பண்புடன் நடத்தி நின்றோய்
வேருடன் நைந்து வாடி
வெள்ளையர் ஆட்சி வீழ
நேரிலா போர்கள் செய்தாய்
நித்தமும் நின் பேர் வாழி
– டாக்டர் மு.வரதராசன்.

இந்தியாவிலேயே முதன்முதலாக 1908ஆம் ஆண்டுத் தொழிலாளர்களது பொருளாதாரக்

கோரிக்கைகளுக்கான போராட்டத்தை அரசியல் போராட்டமாக்கிய தொழிற்சங்கத் தலைவர்.
சுதந்திர வேட்கை, ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு, தன்னலமற்ற பொதுத்தொண்டு, உலக வரலாற்றிலேயே இல்லாத செக்கிழுத்த கொடுமை.

இப்படி எண்ணற்ற தியாகங்களை இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகச் செய்த நமது பெரும்பாட்டன்

வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாள் இன்று (18-11-2017)

அந்த மகத்தான பெருந்தகைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம் | 16-11-2017
அடுத்த செய்திசுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடுதல் தொடர்பாக