அறிவிப்பு: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – துறைமுகம்

56

அறிவிப்பு: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – துறைமுகம் | நாம் தமிழர் கட்சி

நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறைபட்டு செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 81ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 18-11-2017 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, துறைமுகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் *கட்டாயம் பங்கேற்குமாறு* கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 18-11-2017 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: சென்னை, துறைமுகம், கடற்கரை சாலை, இந்தியன் வங்கி எதிரில்
தொடர்புக்கு: +91 99628 91717

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084