அறிவிப்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

9

முக்கிய அறிவிப்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை | நாம் தமிழர் கட்சி

சொந்தநாட்டு மீனவர்கள் என்றும் பாராமல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையைக் கண்டித்தும், தமிழர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 23-11-2017 வியாழக்கிழமை மதியம் 02 மணிக்கு சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கண்டனவுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: 23-11-2017 வியாழக்கிழமை
நேரம்: மதியம் 02 மணிக்கு
இடம்: வள்ளுவர்கோட்டம், சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084