சுற்றறிக்கை: மருத்துவப் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு தொடர்பாக

184

சுற்றறிக்கை: மருத்துவப் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு தொடர்பாக
அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்தும் “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு வரும் செப்டம்பர் 18 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இதில் மருத்துவத்துறை சார்ந்த பேரறிஞர்களும், அறிவுசார் பெருமக்களும் பங்கேற்று தனது கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள். அவ்வமயம், மாநிலம் முழுக்க இருக்கும் மருத்துவத்துறையைச் சார்ந்த நம் கட்சியினரின் பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும், கருத்தரங்கில் பங்கேற்க மாநிலம் முழுக்க இருக்கும் உறவுகள் திரளாக வருகைதர வேண்டும் எனவும் உரிமையோடு அழைக்கிறேன்.
நாள்: 18-09-2017 திங்கட்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: அண்ணா கலையரங்கம், சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்சன் (சென்னை) தொலைக்காட்சி எதிரில், சேப்பாக்கம்.
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
+91-9600709263 / +044-43804084