அறிவிப்பு: ‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (சென்னை) | நாம் தமிழர் கட்சி
——————————
பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்கும் சாதிய நோயை ஒழிப்பதற்குப் போராடிய பெருந்தகை நமது ஐயா இமானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 11-09-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவேந்தல் சுடரேற்றி மலர்வணக்கம் செய்கிறார்.
அவ்வமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை மற்றும் பாசறை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமது ஐயா இமானுவேல் சேகரனார் எந்த நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம் என்கிற உறுதியேற்று சாதி, மத உணர்ச்சியைச் சாகடித்து ‘நாம் தமிழர்’ என்கிற தேசிய இனவுணர்வைப் பெறுவோம்!.
நாம் தமிழர்!
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084