தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவுநாள்: வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

186

தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவுநாள்: வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி

தமிழ்த் தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்கவைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வீரப்போர் புரிந்த புரட்சியாளன்!
அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்!
நமது பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 212ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2017 வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஓமலூரில் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சீமான் தலைமையேற்று வீரவணக்கவுரையாற்றினார்.