அறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | 02-09-2017

143

அறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | வள்ளுவர்கோட்டம் (02-09-2017)

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 02-09-2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார்.

அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 02-09-2017 மிகச்சரியாக காலை 10 மணிக்கு
இடம்: வள்ளுவர்கோட்டம், சென்னை

நீட் தேர்வுக்கு எதிராக போராடிவரும், போராட விரும்பும் மாணவர்கள் / மாணவர் அமைப்புகள் / இயக்கங்கள் எங்களோடு இணைந்து போராட்ட்டத்தை வலிமைப்படுத்த உரிமையோடு அழைக்கிறோம்.

சமூக நீதி, கூட்டாட்சி, மக்களாட்சி, தன்னாட்சி மாண்புகளைப் புறந்தள்ளும் ‘நீட்’ தேர்வை விரட்டியடிப்போம்! வாருங்கள் தமிழர்களே!

தொடர்புக்கு: +91-9841383396 / 9095859921


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-43804084