அறிவிப்பு: தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவேந்தல் – சங்ககிரி | பொதுக்கூட்டம் – ஓமலூர்

364

அறிவிப்பு: 3-8-2017 தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவேந்தல் – சங்ககிரி | பொதுக்கூட்டம் – ஓமலூர் | நாம் தமிழர் கட்சி

தமிழ்த் தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்கவைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வீரப்போர் புரிந்த புரட்சியாளன்!
அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்!
நமது பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 212ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03-08-2017 மாலை 3 மணியளவில் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்விருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஓமலூரில் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இதில் சீமான் தலைமையேற்று வீரவணக்கவுரையாற்றுகிறார்.

மலர்வணக்க நிகழ்வு:
——————————-
இடம்: சங்ககிரி, ஈரோடு பிரிவு சாலை, தீரன் சின்னமலை நினைவு தூண்;
நேரம்: மாலை 3 மணி

வீரவணக்கப் பொதுக்கூட்டம்:
——————————-
இடம்: ஓமலூர்
நேரம்: மாலை 5 மணி

தொடர்புக்கு:
95430 66322 / 98659 09699 / 94430 78503

வலைதளம்: https://goo.gl/kjYAfS


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084