அறிவிப்பு: மாவீரன் சுந்தரலிங்கனார் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – கோவில்பட்டி | 10-06-2017

470

அறிவிப்பு: மாவீரன் சுந்தரலிங்கனார் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – கோவில்பட்டி | 10-06-2017 | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்த் தேசியப் பெரும்பாட்டன் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் புகழ்வணக்கப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நாளை 10-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகின்றார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளீர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது வீரமிகு பெரும்பாட்டனுக்கு பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்த அன்போடு அழைக்கிறோம்.

இடம்:
செண்பகவள்ளி அம்மன் கோயில் அருகில், மேற்கு இரத வீதி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்

தொடர்புக்கு: தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் – 9486471252/ 9629952629 / 9443446432 / 73589 72985

வலைதளம்: https://goo.gl/rO6yw6

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084