வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 8ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

268

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை நடத்துகிற வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் (அபிராமி திரையரங்கம் எதிரில்) நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்

முன்னதாக இளைஞர் பாசறை சார்பாக நிறைவேற்றப்பட்ட பொதுக்கூட்ட தீர்மானங்கள்

https://www.youtube.com/watch?v=STo2pwpDvJw

1.தொடர்ச்சியாக தவறான அரசியல் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தி வரும் பா.ச.க. அரசு தமிழின விரோத அரசாகவும், ஒட்டு மொத்த சமூக விரோத அரசாகவும் விளங்குகிறது.மோடி தலைமையிலான மத்திய ஆளும் பா.ச.க அரசை, அகற்றப்பட வேண்டிய சமூக விரோத அரசு என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பேரறிவிப்பு செய்கிறது.

2.அண்மையில் அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி நபர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எம் சகோதரி நந்தினி படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

3.தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு நிகழ்வான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்க உலகமே வியக்கும் வகையில் அறவழியில் நின்று போராடிய எம் இனத்தின் மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

4.ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்க அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், நடுக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் சந்தையை தீக்கிரையாக்கிய தமிழக காவல் துறையில் உள்ள சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்களை பணி நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் நமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கோருகிறது.

5.கொங்கு மண்டலத்தின் நீர் ஆதாரமான பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி இந்த பகுதியின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கேரளா அரசை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. பவானி ஆற்றுப் படுகையில் தண்ணீரை உறிஞ்ச பெருநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய மேட்டுப்பாளையம் நகராட்சியை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

6.சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் கடலில் கலந்திருக்கிற எண்ணெய் கழிவினை நீக்கும் பணியில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவினை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வன்மையாக கண்டிப்பதோடு,நவீன முறைகளை பயன்படுத்தி உடனடியாக எண்ணெய் கழிவுகளை அகற்றி சுற்று சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

7.மேட்டுப்பாளையம் பகுதியை சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு உள்ளாக்கி வரும் ITC நிறுவனத்திற்கு தடை விதித்து உடனடியாக மூட தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.