மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 01.02.2017

35

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 01.02.2017
===============================
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்துகிற எழுச்சிமிகுந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 01.02.2017 புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

அழைப்பு காணொளி: https://www.youtube.com/watch?v=c7oXAK-p-jM

இன உணர்வோடும், மான உணர்வோடும் எல்லோரும் இணைவோம்!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
மாணவப் புரட்சி வெல்லட்டும்! மானத்தமிழினம் வாழட்டும்!
நாம் தமிழர்!