தடியடி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் சீமான் – 27.01.2017

17

முக்கிய அறிவிப்பு: தடியடி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார் சீமான் – 27.01.2017
———————————
காவல்துறையினரின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளாகி சென்னை, இராசிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நாளை 27.01-2017 காலை 08 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பின்னர், மெரீனா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பம் மீனவர் பகுதிக்குச் சென்று அங்கு தீக்கிரையாக்கப்பட்ட குடிசைப் பகுதிகளைப் பார்வையிடுகிறார், அங்கு நிகழ்த்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி