27.10.2016 மருது பாண்டியர்கள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | சென்னை – முகப்பேர்

65

நம் வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 27.10.2016 வியாழக்கிழமை , மாலை 6 மணிக்கு சென்னை முகப்பேரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்.

முன்னதாக மருது பாண்டியர்களின் உருவப்படத்திற்கு முன் சுடர் ஏற்றிவைத்து மலர் தூவி மலர்வணக்கம் செய்தார்.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன் மற்றும் சிவக்குமார், ஆட்சிமொழி பாசறை புலவர் மறத்தமிழ்வேந்தன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மகேந்திரன், ஜெகதீச பாண்டியன் மற்றும் அறிவுச்செல்வன், மதுரவாயல் மண்டல செயலாளர் மு.வாசு, விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் இராஜேந்திரன், மாநில செய்திப்பிரிவு இணை செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை கார்த்திக், சுடலை உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.