முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் – அப்போலோ மருத்துவமனை சென்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபின் சீமான்

16

முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர் இன்று(06-10-2016) காலை சென்றனர். அப்போது மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். சீமான் அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்றார்.