மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 8-10-2016 திருச்சி

11

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 08-10-2016 (சனிக்கிழமை) அன்று நண்பகல் 02 மணிக்கு திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கிறது.
இதில் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய என கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உணர்வெழுச்சியோடு அவசியம் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்