ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகத்தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (26-09-2016) மாலை 6:30 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தியாகி திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செய்து வீரவணக்க உரையாற்றினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.