மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று மாலை 6 மணிக்கு, சென்னை இராமாபுரம் (அரசமரம் அருகில்) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வீரவணக்கவுரை நிகழ்த்தினார் முன்னதாக செங்கொடியின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தார். இந்நிகழ்விற்கு. மாநில மகளிர் பாசறை செயலாளர் அமுதாநம்பி தலைமை தாங்கினார் மேலும் மாநில ஒருங்கிணைபாளர்கள் மருத்துவர் சிவக்குமார் மற்றும் தனஞ்செழியன், ஆன்றோர் அவை மறத்தமிழ்வேந்தன், மாவட்ட செயலாளர்கள் மு.வாசு, கோகுல், ஏழுமலை, செ.ராஜன், ராஜேந்திரன், மகளிர் பாசறை செயலாளர்கள் சீதாலட்சுமி, இலக்கியா, இளவஞ்சி, கௌரி, உஷா, சுமித்ரா, தேவி, சரளா மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இப்பொதுக்கூட்டதிற்கு நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.